உலக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம் பிடித்து மாஸ்டர் சாதனை!

18 January 2021, 11:54 am
Quick Share

இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த தளபதி!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் மாஸ்டர். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளனமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் இருந்த மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது.

வெளியானது முதல் தொடர்ந்து வசூல் குவித்து வருகிறது. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரையில் வசூல் செய்துள்ளது என்று சினிமா விமர்சகர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் #Master100CRin3days என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு தெரிவித்துள்ளனர்.


கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்திற்குப் பிறகு நியூசிலாந்து, சிங்கப்பூர், சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஆஸ்தில்ரேலியா என்று உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் வர்த்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி 3 மில்லியர் டாலர் வசூல் குவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தளபதியின் மாஸ்டர் படம் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறைவான நாட்களில் ஒரு படம் இவ்வளவு வசூல் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்ல. அதோடு, 50 சதவிகித இருக்கைகளுடன் கூடியதிரையரங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது தளபதியின் மாஸ்டர் இப்படியொரு சாதனை படைத்துள்ளது.


இது குறித்து வர்த்தக ஆய்வாளர் கௌசிக் எல்.எம். தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 5 நாட்களில் மொத்த வசூல் அடிப்படையில், மாஸ்டர் படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இது ஒரு கணம் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. மாஸ்டர்திகுளோபல்டாப்பர், மாஸ்டர்பொங்கல் #MasterTheGlobalTopper #MasterPongal என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0