Master: விஜய்யின் மாஸ்டர் மைண்ட்: ரூ.220 கோடி வசூல் அள்ளிய மாஸ்டர்!

26 January 2021, 3:59 pm
Master 1 - Updatenews360
Quick Share

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் உலகம் முழுவதும் ரூ.220 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் படம் கொரோனா லாக்டவுன் காரணமாக 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், தீனா, சாய் தீனா, பூவையார், நாசர் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கல்லூரி, போதைப் பொருள், சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆகியவற்றை மையப்படுத்தி வெளியான மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் படம் திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் வெறும் 3 நாட்களில் ரூ.100 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது.
தற்போது மாஸ்டர் படம் வெளியாகி 13 நாட்கள் ஆன நிலையில், 12 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.220 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.115 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது.

Master 100Cr - Updatenews360

சென்னையில் மட்டும் ரூ.9.13 கோடி வசூல் கொடுத்துள்ளது. இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மாஸ்டர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழகத்தை வசூல் ரீதியில், தளபதி விஜய் ஆண்டு வருகிறார். குடியரசு தின விழா மற்றும் தைப்பூச தின விழா ஆகிய இரு நாட்களும் விடுமுறை என்பதால், மாஸ்டர் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படம் திரைக்கு வந்ததைத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி உலக காதலர் தினம் என்பதால், பிப்ரவரி 12 ஆம் தேதி மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Views: - 10

0

0