வரலாற்று சாதனை படைத்த மாஸ்டர்: தமிழ் சினிமாவுக்கே கிடைத்த பெருமை!

21 January 2021, 2:44 pm
Quick Share

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.200 கோடி வசூல் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரது நடிப்பில் உருவான படம் மாஸ்டர். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளனமான பிரபலங்கள் நடித்துள்ளனர். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் இருந்த மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. வெளியானது முதல் தொடர்ந்து வசூல் குவித்து வருகிறது. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரையில் வசூல் செய்துள்ளது என்று சினிமா விமர்சகர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் #Master100CRin3days என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தளபதியின் மாஸ்டர் படம் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மாஸ்டர் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. அதோடு, உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலும் கொடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆம், குறைவான நாட்களில் ஒரு படம் இவ்வளவு வசூல் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்ல.

அதோடு, 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது தளபதியின் மாஸ்டர் இப்படியொரு சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படம் ரூ.250 கோடி, சர்கார் ரூ.250 கோடி மற்றும் பிகில் ரூ.300 கோடி என்று வசூல் கொடுத்துள்ளன. தற்போது மாஸ்டர் படமும் ரூ.200 கோடி கொடுத்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இதன் மூலம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்த விஜய்யின் படங்களில் மாஸ்டர் படம் 4ஆவது இடம் பிடித்துள்ளது. அதோடு, மாஸ்டர் படம் உள்பட விஜய்யின் நடிப்பில் வந்த கடைசி 4 படங்கள் மொத்தமாக ரூ.1000 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0