மாஸ்டர் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்: வெளியான நெய்வேலி சீக்ரெட்!

Author: Poorni
7 January 2021, 9:41 am
Quick Share


மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸில் விஜய்யின் நெய்வேலி படப்பிடிப்பின் போது அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 64 ஆவது படம் மாஸ்டர். கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். கல்லூரி மற்றும் போதைப்பொருள் பற்றிய படமாக மாஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.


விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், நாசர், பிரிகிதா, கௌரி கிஷான், அருண் அலெக்சாண்டர், அர்ஜூன் தாஸ், ரம்யா சுப்பிரமணியன், தீனா, ஸ்ரீமன், ரமேஷ் திலக், பிரேம் குமார், சாய் தீனா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு, மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸ் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக, #100MViewsForVaathiComing என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டானது.

ஏற்கனவே படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதோடு, படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடமும் 35 வினாடிகள் என்றும் அதாவது கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்று கூறப்பட்டிருந்தது.


இந்த நிலையில், சுவாரஸ்யமாக இருக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் எடுத்த செல்ஃபி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்க செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற எந்த நடிகருக்கும் செய்ததில்லை. முதல் முறையாக விஜய் எடுத்த செல்ஃபி காட்சி படத்தின் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்ததைத் தொடர்ந்து நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது விஜய் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி, ரசிகர்களைப் பார்த்தவாறு செல்ஃபி எடுத்துக் கொண்டார். தற்போது அந்தக் காட்சி தான் மாஸ்டர் கிளைமேக்ஸில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மாஸ்டர் திரைப்படத்திற்கு திரையரங்கில் 100 சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், அது விதிமீறல் என்று மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Views: - 54

0

0