“கும்முனுதான் வாசம் வீசும் குட்டி பூக்கடை” மாளவிகா மோகனனின் சூப்பர் டூப்பர் Hot Photos !

16 July 2021, 3:22 pm
Quick Share

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டத்திற்காக காத்திருக்கிறேன் என கூறியிருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது புடவை அணிந்து, பூ சூடி, பின்னழகு காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 1021

9

7