Master Collection: 2021ல் தமிழகத்தை ஆளும் தளபதி விஜய்!

25 January 2021, 3:23 pm
Quick Share

விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 115 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

பல போராட்டங்களைக் கடந்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவையும் கடந்து திரைக்கு வந்த படம் தான் தளபதி விஜய்யின் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான பிரலங்கள் நடித்துள்ளனர்.

எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள், பிரபலங்களுக்கு மாஸ்டர் படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆம் தேதி திரைக்கு வந்த மாஸ்டர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் வெறும் 3 நாட்களில் மட்டும் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்து புதிய சாதனை படைத்தது. அதோடு,

இந்திய சினிமாவுக்கும் மாஸ்டர் படம் பெருமை சேர்த்தது. தற்போது மாஸ்டர் படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில், உலகளவில் ரூ.211 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.115 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மாஸ்டர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழகத்தை வசூல் ரீதியில், தளபதி விஜய் ஆண்டு வருகிறார்.

இன்னும் குடியரசு தின விழா விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்கள் இருப்பதால், ரூ.125 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் வாரியாக மாஸ்டரின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்ஸ்:

ஆந்திரா மற்றும் தெலுங்கானா: ரூ.25 கோடி
கர்நாடகா: ரூ.16 கோடி
கேரளா: ரூ.12 கோடி
மற்ற மாநிலங்கள்: ரூ.5 கோடி
வெளிநாடுகள்: ரூ.45 கோடி
இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0