டுவிட்டரில் டிரெண்டாகும் #MasterDisaster ஹேஷ்டேக்!

13 January 2021, 8:51 pm
Master 1 - Updatenews360
Quick Share

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், டுவிட்டரில் #MasterDisaster என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், நாசர், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தணு, பிரிகிதா, கௌரி கிஷான், மகேந்திரன், அர்ஜூன் தாஸ், சாய் தீனா என்று ஏராளமானோர் நடித்திருந்தனர். ஆனால், இத்தனை பேர் ஏன் என்ற கேள்வி படம் பார்த்த பிறகு அனைவருக்குமே புரிய ஆரம்பித்துவிட்டது.

என்னதான் பட மாஸாக இருந்தாலும் கைதி படத்தின் பார்ட் 2 என்று சொல்லும் அளவிற்கு இரண்டாம் பகுதி அமைந்துவிட்டது. இருட்டு, லாரி, சிறைச்சாலை என்று அனைத்துமே கைதி 2 என்று கூறும் அளவிற்கு இருந்துள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும், டுவிட்டரில் #MasterDisaster என்ற் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில், அஜித்தின் விவேகம் படத்தில் தல ஜிம் உடம்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தளபதி ரசிகர்களை கிண்டலடித்து வருகின்றனர். தியேட்டருக்குள் நுழையும் போது தளபதியே என்று கூறி கொண்டு செல்கிறார்கள்.

ஆனால், இடைவேளையில் ஆளவிட்டா போதும்டா சாமி என்று தெரிந்து ஓடு அளவிற்கு படம் அமைந்துவிட்டதாக விமர்சிக்கின்றனர். எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்தளவிற்கு மாஸ்டர் படத்தை இந்த டுவிட்டர் ஹேஷ்டேக் மூலமாக விமர்சித்துள்ளனர்.

Views: - 9

0

0