கர்நாடக சங்கீதத்தை குத்துப் பாட்டாக மாற்றிய மாயா.. பிக்பாஸ் அலப்பறைகள் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 1:34 pm

கர்நாடக சங்கீதத்தை குத்துப் பாட்டாக மாற்றிய மாயா.. பிக்பாஸ் அலப்பறைகள் : வைரலாகும் வீடியோ!!

பிக்பாஸ் சீசன் 7 தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது வரை நடந்த பிக்பாஸ் போட்டிகளில் இது கொஞ்சம் வித்தியாசம். காரணம் இரு வீடுகள் உள்ளதால் சண்டை கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க் நடந்து வரும் நிலையில், நேற்றைய பிக்பாஸ் போட்டியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்க்ப்பட்டது.

சொல்லப்போனால், நிக்சனுக்கு கொடுத்த தனுஷ் கதாபாத்திரம் கச்சிசதமாக பொருந்தியிருந்தது. அதை தவிர, தினேஷக்கு படையப்பா கதாபாத்திரமும், விசித்திராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

இதே போல விஷ்ணுவுக்கு போக்கிரி விஜய், பூர்ணிமாகவுக்கு பருத்தி வீரன் பிரியாமணி என கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இதில் மாயாவுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கந்திர கோலம் பண்ணியிருந்தார்.

என்ன தான்சிரிப்புக்காக அதை செய்தாலும்,கர்நாடக சங்கீதத்தை கொச்சைப்படுத்தியுள்ளார் என்று நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஜீன்ஸ் படத்தில் வரும் வைஷ்ணவி கதாபாத்திரம், அப்போது ஜீன்ஸ் படத்தில் இருந்து கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் ஒலிபரப்பானது. இதை கேட்டதும் அந்த கதாபாத்திரமாக மாறி நடனம் ஆட வேண்டும.

https://youtu.be/4BJD3Tnx2nw

ஆனால் மாயாவோ, குத்துப்பாட்டுக்கு ஆடுவது போன்ற நடனத்தை ஆடி கொச்சைப்படுத்தியுள்ளார். அழகான பாடலை இப்படி அலங்கோலமாக்குவதா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பானவீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!