GOAT படத்தில் நடித்ததால் மன அழுத்தம் கிடைச்சது தான் மிச்சம்.. வேதனையில் நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2025, 11:36 am

கோட் படத்தில் நடித்ததால் மன அழுத்தத்திற்கு ஆளானதாக அப்படடத்தில் விஜய்யுடன் நடித்த பிரபல நடிகை பகீர் கிளப்பியுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் மீனாட்சி சௌத்ரி. இவர் தெலுங்கில் படுபிஸியாக உள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் கோட் கவனத்தை பெற்று தந்தது.

விஜய்யுடன் ஜோடியாக நடித்த மீனாட்சி சௌத்ரி, தற்போது கோட் படத்தில் நடித்ததால் மன அழுத்தம் இருந்ததாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: சிறுவன் ஸ்ரீதேஜ்க்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு ஓடிய அல்லு அர்ஜூன்!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், விஜய்யுடன் கோட் படத்தில் நடித்ததால் கேலி, கிண்டலுக்கு ஆளானதாகவும், ட்ரோல்கள் இணையத்தில் வெளியானதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் லக்கி பாஸ்கர் படத்தின் மூலமாக நல்ல பெயர் கிடைத்தால், இனி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விருப்பப்படுவதாக கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே எரிச்சலை கிளப்பியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?