அட கொஞ்சம் பொருமா… விஜய் கூட ரொமான்ஸ் பண்ண துடிக்கும் மீனாட்சி சவுத்ரி – Shooting எப்போ தெரியுமா?

Author: Rajesh
27 February 2024, 8:22 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். ஆம், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.

படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, வருகிற மார்ச் 1ஆம் தேதி இந்த படத்தின் அடுத்த கட்ட ஷெட்யூல் சென்னையில் துவங்க உள்ளது. இதில் நடிகர் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து ரொமான்ஸ் செய்யும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. இதற்காக முழு வீச்சில் செட் போடப்பட்டு வருகிறது.

விஜய்யுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி மிகுந்த ஆர்வத்துடன் தயார் நிலையில் இருக்கிறாராம். பாடல் காட்சி படமாக்கப்பட்டதும் அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்கு GOAT படக்குழுவினர் ரஷ்யா செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

  • sikandar movie producer decided to claim 90 crores in insurance 90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?