“அப்புறம் ஏன் சார் என்ன சிவகார்த்திகேயன் படத்துலேந்து தூக்குனீங்க”?பாரதிராஜாவை தாக்கும் மீரா மிதுன்…!

10 August 2020, 5:15 pm
Quick Share

சூப்பர் மாடல் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மீரா மிதுன் அவர்கள், நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி தவறாகப் பேசியதால் இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதைச் சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாசாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டு கால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே!

அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளைக் கடிவாளம் போடாமல் வரம்பு மீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினராக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இதைப்பார்த்த மீரா மிதுன், ” அப்புறம் ஏன் சார் என்னை நம்ம வீட்டு பிள்ளை படத்துலேந்து தூக்குனீங்க? பாண்டிராஜ் எல்லாமே என்கிட்ட சொல்லிவிட்டார்.” என்று எதிர்க் கருத்து வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

Views: - 12

0

0