தலைமறைவாக இருந்த மீரா மிதுன் டெல்லியில் கைது! வளைத்துப்பிடித்த போலீஸார்…
Author: Prasad4 August 2025, 6:28 pm
தலைமறைவாக இருந்த மீரா மிதுன்
கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை மீரா மிதுன். இதனை தொடர்ந்து அவரது பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீரா மிதுன் மீதும் அந்த வீடியோவில் அவருடன் இருந்த சாம் அபிஷேக் என்பவர் மீதும் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. ஆனால் மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார்.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த நிலையில் மீரா மிதுனின் தாயார் தனது மகளை காணவில்லை எனவும் தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீரா மிதுனை ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. தலைமறைவான மீரா மிதுன் டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கசிந்திருந்த நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டது.

மீரா மிதுன் கைது
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் டெல்லியில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு டெல்லி காப்பகத்தில் இருக்கும் மீரா மிதுன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
