மீண்டும் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்..! ‘ஏய் நீ அடங்க மாட்டியா’ – கொந்தளித்த ரசிகர்கள்…!

8 August 2020, 12:58 pm
Quick Share

நடிகர் விஜய் மற்றும் சூர்யா அவர்கள் குறித்து தவறாக பேசி, ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்ட மீரா மிதுன், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகை தலைதூக்க செய்வேன் என போர் கொடி உயர்தியுள்ளார், உலக நாயகி நடிகை மீரா மிதுன். அப்படி என்னதான் பிரச்னனேனு அவங்க கிட்ட கேட்டா… கோலிவுட்டில வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் இருக்கு. அதை நான் தட்டி கேட்டே ஆவேனு ஒத்த காலுல நிக்குறாங்க மீரா மிதுன்.

சமீப காலமாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சையை கிளப்பும் விதமான கருத்துக்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார். இதேபோல் சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா ஆகியோர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன் படுத்தி பேசிய வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதை பார்த்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். தொடர்ந்து, சமூக வலைதளங்கள் முழுவதும் மீரா மிதுனை கலாய்த்தும், கெட்ட கெட்ட வார்த்தைகளில் காது கிழிய திட்டியும் தீர்த்தார்கள். இது மட்டும் இன்றி தளபதி ரசிகர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மீரா மிதுன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். மீரா மிதுன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மீரா மிதுனின் இந்த சேட்டையை கண்டு காண்டான சனம் செட்டி, ” அட போமா உன் லெவல்கு விஜய் சார் வரமாட்டாரு… உனக்கு பதில் சொல்ல நானே போதும்னு” குறிபிட்டு “ஒழுக்கமா இருந்தா உனக்கு நல்லது” என சூசகமாக அறிவுறை வழங்கினார். அதை பார்த்து டென்ஷன் ஆகிய மீரா மிதுன், இந்த நெபடிசம் ப்ராடக்டுகளை சப்போர்ட் பண்ணி பேசுகிறவர்கள், எங்கேயாச்சும் ஓரமா ஒரு ஐட்டம் டான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாக கூறி சூட்டை தனித்துக்கொண்டார்.

இதேபோல், நடிகை கஸ்தூரியும் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் மற்றும் சூர்யா போன்றவர்கள் தங்கள் கடின உழைப்பாலும், சொந்த திறமையாலும் ரசிகர்களை ஈர்த்தவர்கள் என கூறியுள்ளார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டர்களின் கருத்து குறித்து விரிவாக பேச வேண்டும் விரைவில் வீடியோ வெளியிடுகிறேன் என மீராவை சைலன்டாக கலாய்துள்ளார்.

அட… இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு நடிகர் விஜய் வாய் திறக்கமாக இருக்காரேனு யோசிக்க தேவையில்லை… அவர்தான் சொல்லிட்டாரே “கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும், உசுப்பேத்துரவன் கிட்ட உம்மும் இருந்துட்டா வாழ்க ஜம்முனு இருக்கும்னு”. இதையே நடிகர் சூர்யாவும் பின்பற்றுகிறார்.

நடிகையும், மாடலும் என கூறப்படும் மீரா மிதுன், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், நெகடீவ் ரோலை கையில் எடுத்தாவது சமூகத்தில் நான் பிரபலமாவேன் என்று பிடிவாதமாக உள்ளார். இதில் இன்னும் எத்தனை தலைகள் உருள போகிறதோ…!

Views: - 16

0

0