இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

Author: Prasad
8 April 2025, 5:28 pm

தடை செய் தடை செய்…

தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என கோஷங்கள் எழுந்துள்ளன. சில திரைப்படங்கள் தடை செய்யவும் பட்டுள்ளது. ஆனால் ஒரு திரைப்படத்தை பற்றிய சட்டமன்ற விவாதம் அத்திரைப்படத்தின் பப்ளிசிட்டிக்கு உதவிய ஒரு வரலாற்று சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப் போகிறோம். 

கிளாசிக் திரைப்படம்

1964 ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் முத்துராமன், ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ, சச்சு, நாகேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. 

members in tn assembly discussed about kadhalikka neramillai movie

இத்திரைப்படம் வெளியான சமயத்தில் தமிழக சட்டமன்றத்தில் இத்திரைப்படத்தை குறித்த விவாதம் நடைபெற்றதாம். “இந்த படத்தின் பெயரிலும் ஆபாசம் இருக்கிறது. பல காட்சிகளிலும் ஆபாசம் இருக்கிறது. அதனால் இப்படிப்பட்ட திரைப்படத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமா? அனுமதிப்பதி சரியா?” என்ற விவாதம் சட்டமன்றத்திலே எழுந்ததாம். 

அப்போது பல உறுப்பினர்கள், “காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் கவர்ச்சிகரமாக இருக்கிறது. படத்திலும் சில காட்சிகள் கவர்ச்சிகரமாக இருக்கிறதே தவிர அந்த படத்திலே எந்த காட்சியிலும் ஆபாசம் இல்லை” என கருத்து தெரிவித்தனர். சட்டமன்றத்தில் நடந்த இந்த விவாதம் செய்திகளாக வெளிவந்து இத்திரைப்படத்திற்கு விளம்பரமாக அமைந்ததாம். இத்தகவலை சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!