மெட்ரோ திரைப்பட நாயகன் சிரிஷ் திருமணம்; காதலியை கரம் பிடித்தார்; நேரில் வாழ்த்திய தனுஷ், சிவகார்த்திகேயன்

Author: Sudha
14 July 2024, 3:23 pm
Quick Share

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் சிரிஷ். மெட்ரோ திரைப்படத்தில் பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து ராஜா ரங்குஸ்கி, ப்ளடி மணி, பிஸ்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார்ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய ‘மெட்ரோ’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ்.தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

பல ஆண்டுகளாக தான் காதலித்து வந்த ஹஸ்னா என்ற பெண்ணை நேற்று முன்தினம் கரம் பிடித்தார் சிரிஷ். நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவரது திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது.

நேற்று நடந்த திருமண வரவேற்பில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் பாண்டயன், ஆர்யா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு விழா புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Duraimurugan 200 திமுக ஜெயிக்கணும்… 34 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கு விட்டறணும் : இதுதான் நடக்கணும்.. அமைச்சர் துரைமுருகன்!
  • Views: - 59

    0

    0