காசு சேத்து கஷ்டப்பட்டு கட்டுனா மண்டபம்.. விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்ட பணம் இது தானாம்..!

Author: Vignesh
3 January 2024, 5:34 pm

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

vijayakanth-updatenews360

முன்னதாக ஆண்டாள் அழகர் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்படுவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்ட அரசாங்கம் முடிவு செய்து இருந்தது. அப்போது, விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் இடையூறாக இருப்பதாக கூறி மண்டபத்தின் பாதியை அப்படியே இடித்துவிட்டு அந்த இடத்தை அரசாங்கம் கைப்பற்றியது.

vijayakanth-updatenews360

பெரிய அளவில் இருந்த மண்டபம் இப்போது, பாதியாக இருக்க அதையே தனது தேமுக அலுவலகமாக கேப்டன் மாற்றிவிட்டார். அந்த மண்டபம் இடிக்கப்பட்ட பகுதி பல கோடிகள் போகும். ஆனால், விஜயகாந்த் தனக்கு ரூபாய் 7 கோடி தான் கொடுத்தார்கள் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்று பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vijayakanth-updatenews360
  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?