என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

Author: Selvan
12 March 2025, 4:03 pm

மோகன் ஜி உருக்கமான பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க: என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

தமிழில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை,திரவுபதி,பகாசூரன் போன்ற படங்கள் மூலம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் மோகன் ஜி,நேற்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரொம்ப எமோஷனல் ஆக பேசியுள்ளார்.

அதில் சேலத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தேன்,அப்போது எளம்பலூர் என்ற இடத்தில இயற்கை கொடுத்த அழகிய மலையின் பாதியை காணும்,இதெல்லாம் எங்க போய் முடிய போது,இயற்கையை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டாமா,பார்க்கும் போது எனக்கு ரொம்ப வயித்தெரிச்சலாக உள்ளது.

அதனால் தான் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளேன்,இதெல்லாம் தட்டி கேட்க இங்க யாரும் வர மாட்டாங்க..கனிம வளத்துறை அதிகாரிகள் இந்த மலையை பாதுகாத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் பேசி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திருப்பார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!