மெயின் புள்ளி நடிகர் மோகன் லால்…? பாலியல் புகாருக்கு பயந்து 17 பேர் கூண்டோடு ராஜினாமா!

Author:
27 August 2024, 5:44 pm

மலையாள திரைப்படத்துறையில் கடந்த சில நாட்களாக பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பல நடிகைகள் வெளிப்படையாக புகார்கள் தெரிவித்து பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை பாவனா காரில் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .

இச்சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகர் திலீப் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் பேரதிர்ச்சியை கொடுத்ததையடுத்து மலையாள நடிகைகள் மற்றும் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் எல்லோரும் ஒன்று கூடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் அதற்காக ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதனடிப்படையில் கேரளா அரசு திரைத்துறையில் நடிக்கும் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதியான ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தனர். இந்த கமிட்டியில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த… நேர்ந்து கொண்டிருக்கும் பாலியல் புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

அதை எடுத்து தற்போது 60க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை முதல்வர் பிரனாயி விஜயனிடம் தற்போது அளித்தது. இதை அடுத்து நடிகைகள் ஒவ்வொருவரின் விவகாரம் வெளியில் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரீலேகா மித்ரா, நடிகை ரேவதி சம்பத், நடிகை மினு முனீர் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை கூறி அதிரவைத்தனர்.

இந்த விஷயம் இப்படியாக இருக்க மலையாள சினிமாவில் தொடர்ந்து பாலியல் ரீதியான புகார்கள் அதிகரித்து அதிர வைத்து வரும் நிலையில் பிரபல மலையாள நடிகரும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவருமான மோகன் லால் நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். அவர் மட்டும் இன்றி கிட்டத்தட்ட 17 நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கொடுத்து வந்த நிலையில் திடீரென நிர்வாக பொறுப்பிலிருந்த இத்தனை பேர் ராஜினாமா கூண்டோடு செய்திருப்பது கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் இவர்கள் எல்லோரும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. எனவே நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்த மோகன் லால் மெயின் புள்ளியாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!