பணம் என்றது வாய்பிளக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் : சண்டை போட்டு வெல்பவருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா..?

Author: Rajesh
3 April 2022, 5:30 pm

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவர் படப்பிடிப்பு பணிகளில் பிசியானதால் அவருக்கு பதில் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். கமல்ஹாசனைப் போல் சிம்புவும் தொகுப்பாளராக அசத்தி வருகிறார்.

14 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கொடுத்த மணி டாஸ்கில் வெற்றிபெற்று சுருதி வெளியேறியதால் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மணி டாஸ்கில் ரூ.15 லட்சம் பணத்துக்காக ஜூலிக்கும், சுருதிக்கும் இடையே போட்டி நடத்தப்பட்டது. இதில் சுருதி வென்றதால் அவர் 15 லட்சம் பணத்துடன் வெளியேறினார்.

இதையடுத்து எஞ்சியுள்ள 6 போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மீண்டும் பணப்பெட்டியை போட்டியாளர்கள் முன் கொண்டுவந்து காட்டும் சிம்பு, எஞ்சியுள்ள 6 பேரிடம் டீல் பேசுகிறார். அந்த பெட்டியில் ரூ.25 லட்சம் பணம் இருப்பதாக கூறுகிறார்.

அந்த பணம் வேண்டும் என்பவர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்படும் என்றும், அதில் வெல்பவர்களுக்கே அந்த ரூ.25 லட்சமும் கிடைக்கும் என கூறுகிறார் சிம்பு. இதைக் கேட்டதும் போட்டியாளர்கள் வாயடைத்து போகினர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?