மூக்குத்தி அம்மன் விமர்சனம்

17 November 2020, 8:22 pm
Quick Share

ஆர் ஜே பாலாஜி மற்றும் என் சரவணன் ஆகியோரது இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இத்திரைப்படத்தினை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-இல் இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது.

நாகர்கோயிலினை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இத்திரைப்படத்தில் ஒரு லோக்கல் டிவி சேனல் ரிப்போர்ட்டராக ஆர் ஜே பாலாஜி தோன்றியுள்ளார். லோயர் மிடில்கிளாஸ் பேமலியை சேர்ந்தவரான இவர் தந்தையால் கைவிடப்பட்ட குடும்பத்தை பொறுப்பேற்று நடத்துகிறார். அவருக்கு மௌலி தாத்தாவாகவும் ஊர்வசி அம்மாவாகவும் மற்றும் 3 தங்கைகளும் இருக்கின்றனர். தினம்தினம் நாட்களை கடத்துவதே மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலையில் தங்களது குலதெய்வ கோவிலான மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அப்பொழுது மூக்குத்தி அம்மன் ஆன நயன்தாரா நேரடியாக ஒரு காரணத்திற்காக ஆர்ஜே பாலாஜி முன்பு தோன்றுகிறார்.

ஆர் ஜே பாலாஜி தனது அரசியல் புரிதலோடு எல்கேஜி படத்தில் நடித்திருந்தது அவருக்கு நல்ல ரிசல்ட்களை வழங்கியது. அதை போலவே இதிலும் சில இடங்களில் அதில் வெளிப்படுகிறது. வழக்கமாக வரும் அம்மன் திரைப்படங்களிலிருந்து மூக்குத்தி அம்மன் திரைப்படம் மாறுபட்டு இருப்பது பாராட்டுக்குரியது. படம் மிக அழகாக வித்தியாசமான கதைக்களத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது திரைப்படத்தின் வில்லன் தோன்றும் காட்சிகள், ஆமீர் கான் நடிப்பில் வெளிவந்த பிகே திரைப்படத்தினை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.படத்தில் தோன்றும் ஒரு ஏலியன், உலகில் மொத்தம் இரண்டு கடவுள்கள் உள்ளனர் ஒன்று உண்மையான கடவுள் மற்றொன்று மக்கள் மனதில் தானாகவே உருவாக்கப்பட்டிருப்பது என்று சொல்கிறார்.

பர்ஃபாமென்ஸ்

மிகச்சிறந்த தேர்ந்த நடிகர்களை இத்திரைப்படத்திற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அனைவரையும் விட தனித்து தெரிவது ஊர்வசி மட்டுமே. பழம்பெரும் நடிகரான மௌலியை சற்று உப்புக்கு சப்பாணியான ரோல் கொடுத்திருப்பது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. மற்றபடி அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களோடு ஒன்றி இருக்கிறார்கள்.

பலம்

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆகியவை மிகப்பெரும் பலம் சேர்க்கின்றன. மூக்குத்தி அம்மன் திரைப்படம் குடும்பங்களோடு அமர்ந்து பார்க்க வேண்டிய ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது. ஆனால் படக்குழுவினர் தியேட்டர்களில் நேரடியாக ரிலீஸ் செய்வதற்கு காத்திராமல் ஏன் திடீரென ஓடிடி-இல் வெளியிட்டார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறத.

மிகவும் அழகாக செல்லும் கதைக்களத்தில் நடுவே திரைக்கதை சற்றே தடுமாறினாலும் கச்சிதமாக படம் நிறைவடைகிறது.

Verdict : மூக்குத்தி அம்மனின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும்

ரேட்டிங் : 3/5