மூக்குத்தி அம்மன்-2 படத்தை ஓரம் கட்டிய சுந்தர் சி…நயன்தாரா தான் அதற்கு காரணமா…தயாரிப்பாளர் புலம்பல்..!

Author: Selvan
28 January 2025, 7:04 pm

தள்ளி போகும் மூக்குத்தி அம்மன் 2

நடிகர் சுந்தர் சி இயக்கிய மதகதராஜா திரைப்படம் 12 வருடத்திற்கு பிறகு திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு வருகிறது.இதனால் மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை சூட்டோடு சூடா எடுக்க சுந்தர் சி திட்டமிட்டு வருகிறார்.

இதையும் படியுங்க: ரவி மோகன் படத்தில் சிக்கல்…திடீரென விலகிய இசையமைப்பாளர்…அதிர்ச்சியில் படக்குழு..!

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க போவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.விரைவில் இப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சுந்தர் சி விஷாலுடன் படம் இயக்க போவதாக அறிவித்திருப்பது தயாரிப்பாளர் ஐசரி கணேச மூர்த்திக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

Mookuthi Amman 2 postponed

ஏற்கனவே படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா எனக்கு சம்பளம் வேண்டாம் அதற்கு பதிலாக என்னையும் இப்படத்தின் தயாரிப்பாளராக சேர்க்க வேண்டும் என்ற கூறிய நிலையில் படத்தின் போஸ்டரில் அவருடைய ரவுடி பிக்சர்ஸ் பெயரும் சேர்த்து வெளியிட்டார்கள்.ஆனால் படத்தில் நடிக்க நயன்தாரா இன்னும் கால்ஷூட் கொடுக்காத காரணத்தினால் சுந்தர் சி தற்போது இப்படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் எப்போது கால்ஷூட் கொடுக்கிறாரோ,அப்போ மூக்குத்தி அம்மன்-2 படத்தை ஆரம்பிக்கலாம் என படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேச மூர்த்தியிடம் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.இதனால் தயாரிப்பாளர் பெரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!