VALIMAI Motion Poster🔥 தல வேற Level ! செம்ம Mass -ஆ இருக்காரு !

11 July 2021, 6:28 pm
Quick Share

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் பூஜை மாஸ்டர் படத்தின் பூஜையின்போது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. ஆனால் மாஸ்டர் படம் முடிக்கப்பட்டு வெளியாகி தற்போது விஜயின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட வெளிவந்துவிட்டது.

ஆனாலும் வலிமை படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராததால் தல ரசிகர்கள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவரையும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கறாராக அப்டேட் தருவது மாதிரி தெரியவில்லை.

தற்போதுகூட திடீரென்று 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகிறது என்று சுற்றுவட்டார தகவல் வந்ததே தவிர போனி கபூர் எதுவும் சொல்லவில்லை. சரி தற்போது மோஷன் போஸ்டர் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இரண்டு வருஷ பசிக்கு தீனியாக அமைந்துள்ளது மோஷன் போஸ்டர். தல சும்மா அப்படி இருக்காரு என்று சொல்லத்தோன்றுகிறது. சும்மா நெருப்பு மாதிரி பிஜிஎம் போட்டு தெறிக்க விட்டு இருக்காரு யுவன், என்று தல ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Views: - 237

9

0