அம்மாவான ராஜா ராணி சீரியல் நடிகை ஶ்ரீதேவி – என்ன குழந்தை தெரியுமா ?…

6 July 2021, 11:04 am
Serial Actress Sridevi - Updatenews360
Quick Share

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி. போன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வைராலாகி வந்தது. தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றுநிரு வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நடிகர்கள், நடிகைகள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 523

36

4