ப்ளூ சட்டை மாறன் இயக்கிய “Anti Indian” படத்தின் Motion Poster ரிலீஸ் – அதிகரிக்கும் Dislike – கள்…!

14 May 2021, 10:00 am
Quick Share

ப்ளு சட்டை மாறனை டிஜிட்டல் உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவர் ஒரு படம் விமர்சனம் செய்கிறார் என்றால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு தான் கிடப்பார்கள், அந்த அளவிற்கு கடுமையான விமர்சகர் என்று அவருக்கு பில்ட் – அப் கொடுத்துள்ளனர். ஆனா ‘ஆள் டம்மி பாவா’ என்ற அளவிற்குத்தான் அவரின் சினிமா அறிவு இருக்கும். அந்த அளவிற்கு இவருடைய திரை விமர்சனங்கள் சர்ச்சையை சந்திக்கும். ரஜினி கமல் அஜீத் விஜய் உள்பட அனைத்து பெரிய நடிகர்களின் படங்களையும் கழுவி கழுவி ஊற்றி விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார் என்பது தெரிந்ததே.

‘ஆண்ட்டி இந்தியன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர், இதை கேட்ட பலருக்கும் ஆரம்பமே இப்படி சர்ச்சையான அப்டேட்-ஆக வந்துள்ளதே என்று கூறி வருகின்றனர்( எல்லாம் விளம்பரம்தான் பாஸ் ).

எல்லோர் படத்தையும் கடுமையாக தாக்கியுள்ள இவரின் படத்தை தாக்க திரையுலகத்தை சார்ந்த எல்லோரும் கழுகு போல் இமையசைக்காமல் WAITING – இல் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து இருப்பதாகவும் குறிப்பாக யூடியூப் பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
அரசியல் நையாண்டி மற்றும் காமெடி கலந்த இந்த படத்தில் பாஜக அரசை நக்கல், நய்யாண்டி அடித்து எடுத்துள்ளார். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படத்திற்கு தடை விதித்து இருந்தார்கள். இதனால் ரிவைசிங் சென்சார் போர்டு செல்வதாக இருக்கிறார்கள்.

தற்போது படத்தை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என டி, ராஜேந்தரை போல் பன்முக திறமைகளை காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும் இந்த மோஷன் போஸ்டர் வெளியான சில நேரங்களிலேயே Dislike – கள் அதிகரித்து வருகிறது..

Views: - 251

8

26