மகனுடன் கிரிக்கெட் விளையாடிய அஜித்.. ஆத்விக் பவுலிங்கில் அவுட் ஆன AK.. பங்கமாக கலாய்த்த ப்ளு சட்டை..!

Author: Vignesh
19 June 2024, 6:14 pm

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவர உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. இதற்கு இடையில் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.

இதற்காக நாளை படக்குழு அஜர்பைஜான் கிளம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு இடையில் கிடைத்த இடைவெளியில் மகனுடன் அஜித் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தமிழ் படங்களுக்கு மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் கவனம் கிடைக்கும் மாற்று மொழி படங்களுக்கும் விமர்சனம் செய்துகொண்டு இருக்கும் ப்ளு சட்டை மாறன் தற்போது, அஜித்குமாரின் ரீசன் போட்டோக்களுக்கு ரிவ்யூ கொடுத்துள்ளார். அதாவது, அஜித் உடன் கிரிக்கெட் விளையாடுவதை போன்ற புகைப்படம் இன்று இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில், இந்த புகைப்படங்கள் குறித்து ஒரு செய்தியை தொலைக்காட்சி நிறுவனம் செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் இதை வழக்கம் போல போட்டோ எடுத்து பப்ளிசிட்டி செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களும் வழக்கம் போல பப்ளிசிட்டி செய்து விட்டார்கள். இதுதான் தலயின் எளிமை என விமர்சித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!