ஹைதராபாத் படப்பிடிப்பில் மிருணாள் தாக்கூருக்கு காயம்? பதறிப்போன படக்குழுவினர்!
Author: Prasad26 July 2025, 1:16 pm
சீரியல் டூ சினிமா!
ஹிந்தி சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர்தான் மிருணாள் தாக்கூர். அதனை தொடர்ந்து மராத்தி திரையுலகில் அறிமுகமான அவர், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது “Dacoit: A Love Story” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

மிருணாள் தாக்கூருக்கு காயம்?
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சிகளை படமாக்கியபோது மிருணாள் தாக்கூர், அதிவி சேஷ் ஆகிய இருவருக்குமே காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிவி சேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனராம். எனினும் மிருணாள் தாக்கூருக்கு லேசான காயம்தானாம்.
இருப்பினும் இருவரும் சிகிச்சை எடுத்தக்கொண்ட பின் சில நிமிடங்களிலேயே மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இருவரும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “Dacoit: A Love Story” திரைப்படத்தில் முதலில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு மிருணாள் தாக்கூர் இப்படத்தில் ஒப்பந்தமானார்.
