இரவு விருது விழாவில் வாரிசு நடிகரால் ஏற்பட்ட அவமானம் – மிருணாள் தாகூர் வேதனை!

Author: Rajesh
8 February 2024, 10:43 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

mrunal thakur - updatenews360.png 2

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

mrunal thakur

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதாவது, நான் இரவு நேரத்தில் விருது விழாவிற்கு சென்றிருந்தேன்.

அப்போது என்னிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு வாரிசு நடிகர் அங்கு வந்தார். உடனே என்னை பேட்டி எடுத்துக்கொண்டு இருந்த பத்திரிகையாளர்கள் அவர்களிடம் சென்றுவிட்டனர். நான் திடீரென அங்கு கழட்டிவிடப்பட்டது போல் உணர்ந்தேன். Nepotism என்ற பெயரில் அவர்களை பழி போட முடியாது. இதில் அவர்களுடைய தவறு எதுவும் இல்லை. மீடியா வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே காரணம்” என்று மிருணாள் தாகூர் மிகுந்த கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!