ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசளித்த முகேஷ் அம்பானி… விலை கேட்டால் ஆடி போயிடுவீங்க!

Author: Shree
1 July 2023, 8:17 am

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் மகனான ராம் சரண் 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகமாக அமைந்து 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருதுகளை ராம் சரண் வென்றார்.

அதன் பிறகு மாவீரன் திரைப்படம் கைகொடுத்தது. கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த அந்த தம்பதிகள் ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண் குடும்பம் அறிவித்தது. அதையடுத்து அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடைபெற்றது.

ஜூன் 20 அன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண்குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் ராம் சரண் மகளுக்கு பெயர் சூட்டுவிழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக முகேஷ் சிம்பனி தனது மனைவி நீடா அம்பானியுடன் கலந்துக்கொண்டார். அப்போது ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசாக கொடுத்தார்கள். அது 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டில் என கூறப்படுகிறது அதன் விலை மட்டும் ரூ.1 கோடியாம். ராம் சரண் மகளுக்கு “க்ளின் காரா கோனிடெலா” என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!