“கோல்ட் மீனு” – சோபாவில் முரட்டு போஸ் கொடுத்த பூமி பட நடிகை

23 February 2021, 11:22 pm
Munna Michael - Updatenews360
Quick Share

முன்னா மைக்கேல் படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் நிதி அகர்வால். அதன் பின் தெலுங்கில் சாவ்யாட்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படங்கள் எல்லாம் சுமாராக ஓடின. சமீபத்தில் ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் வெளிவந்த பூமி படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். சொல்லி வைத்தது போல இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகியதால் ஒரே குஷியில் இருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அந்த அளவு மக்களிடம் ரெஸ்பான்ஸ் இல்லாததால் தமிழில் மார்க்கெட் இல்லாமல் இருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான நிதி அகர்வால் தொடர்ந்து தனது இன்ஸ்டால் புகைப் படங்களை பதிவேற்றி வருகிறார்.

கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத இவர் அவ்வப்போது கிளாமர் படங்களை அள்ளி வீசுகிறார். இதனாலேயே இவரை தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பனியனை மட்டும் அணிந்து சோபாவில் முரட்டு போஸ் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் “கோல்ட் மீனு” என புகழ்ந்து வருகின்றனர்.

Views: - 5

0

0