மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?

Author: Prasad
30 April 2025, 12:25 pm

புரட்சி நாயகன்

தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகராக வலம் வந்தவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் காலத்தை தாண்டியும் மனதில் நிற்கக்கூடியவை. இவர் கடைசியாக ஹீரோவாக நடித்த திரைப்படம் “நீ உன்னை அறிந்தால்”. இதனை தொடர்ந்து தனது மகன் அதர்வா நடித்த “பாணா காத்தாடி” திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்து சென்றார். 

murali love actress sivaranjani but she did not accept him

பல திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த முரளி, 2010 ஆம் ஆண்டு தனது 46 ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல பத்திரிக்கையாளரான சபிதா ஜோசஃப் முரளி குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். 

காதல் விரக்தி

அதாவது முரளி, சிவரஞ்சனி என்ற நடிகையை ஒரு தலையாக காதலித்தாராம். அதுவும் முரளிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அதர்வாவும் பிறந்துவிட்ட பிறகு அவர் சிவரஞ்சனியை காதலித்தாராம். “நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?” என்று கேட்கும் அளவுக்கு முரளி போய்விட்டாராம். ஆனால் சிவரஞ்சனி ஒப்புக்கொள்ளவில்லையாம்.

murali love actress sivaranjani but she did not accept him

ஆதலால் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் அவருக்கு வந்துவிட்டதாம். இந்த பழக்கும் அத்துமீறிப்போய் படப்பிடிப்புத் தளத்திற்கும் மது குடித்துவிட்டு வரும் வழக்கமும் வந்துவிட்டதாம். ஆதலால் சண்டைக் காட்சிகளிலோ ஹீரோயினுடனான ரொமான்ஸ் காட்சிகளிலோ அவரால் ஈடுபாடுடன் நடிக்க முடியாமல் போனதாம். இவ்வாறு ஒரு தகவலை சபிதா ஜோசஃப் தனது வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.  

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!
  • Leave a Reply