நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

Author: Prasad
14 June 2025, 6:44 pm

சின்மயி VS தீ

“தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த காரணத்தினால் அவ்விழாவில் சின்மயி முத்தமழை பாடலை பாடினார். 

muththa mazhai video song in thug life movie released now

சின்மயியின் குரலில் இப்பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும் “தீ குரலை விட சின்மயி குரல்தான் சிறப்பாக இருந்தது” என கூறினார்கள். ஆனால் சின்மயி தமிழ் திரைப்பாடல்களை பாடுவதற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் முத்தமழை பாடலின் ஹிந்தி, தெலுங்கு வெர்ஷனை அவர் பாடியிருந்தார். 

வெளியானது வீடியோ பாடல்

“தக் லைஃப்” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் “முத்தமழை” பாடலை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை. 

muththa mazhai video song in thug life movie released now

இந்த நிலையில் பாடகி தீ பாடிய “முத்தமழை” பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேடையில் பலரின் முன்னிலையில் திரிஷா இப்பாடலை பாடுவது போல் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடகி தீயின் குரல் திரிஷாவுக்கு பொருந்தவே இல்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “நல்லவேளை இப்பாடலை படத்தில் வைக்கவில்லை” என்றும் விமர்சித்து வருகின்றனர். அதே போல் பலரும் சின்மயியின் குரல்தான் திரிஷாவுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!