டபுள் மடங்கு இல்ல… ட்ரிபிள் மடங்கு சம்பளம் கொடுத்தாலும் அந்த படத்தில் நடிக்கமாட்டேன்… ஒதுங்கிய பிரியா பவானி சங்கர்…!

Author: Rajesh
4 March 2022, 2:39 pm
Quick Share

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைச் சொல்லும் படமாக ‘800’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர், நடிகைகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்க முன்னதாக விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். ஆனால் இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ‘800’ படத்திலிருந்து விலகினார்.

இனிமேல் தமிழில் யாரும் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்த இயக்குனர், ஹீரோவை இந்தி திரையுலகில் தேடினார். அதன்படி இந்தி ஹீரோ ஒருவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் ஹீரோயின் ஆவது தமிழ்நாட்டில் கிடைப்பார்களா என்று வலை வீசி தேடி வந்தனர். இதனிடையே இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருபவர் தான் பிரியா பவானி சங்கர்.


‘800’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று படக்குழு அவரிடம் கேட்டுள்ளனர். டபுள் மடங்கு இல்ல.. ட்ரிபிள் மடங்கு சம்பளம் கொடுத்தாலும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கி கொண்டாராம் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து இயக்குனர் எத்தனையோ முறை கேட்டும், இந்த படத்தில் தான் நடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டு சென்று விட்டாராம்.

தமிழில் முன்னணி நடிகரான விஜய்சேதுபதிக்கே இந்தப் படத்தில் நடிப்பதற்கு பல விதமான எதிர்ப்புகள் கிளம்பிய போது நான் எப்படி இந்த படத்தில் நடிக்க முடியும் என்று தனது நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம்.

Views: - 549

2

2