ஜெனிலியா இல்லாமல் என் வாழ்க்கை முழுமையடையாது – சித்தார்த் வெளிப்படை!

Author: Rajesh
3 January 2024, 11:56 am

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் சித்தா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தாலும் தியேட்டரில் நன்றாக ஓடி நல்ல விமர்சனத்தை பெற்றது.

genelia-updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சித்தார்த் ஜெனிலியா குறித்து பேசினார். அதாவது, ஜெனிலியா எனக்கு மட்டும் இல்லை என குடும்பத்தினருக்கே மிகச்சிறந்த நண்பர். என்னுடைய பிறந்தநாளுக்கு யாரு போன் பண்றாங்களோ இல்லையோ ஜெனிலியா வருடம்தோறும் தவறாமல் எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லுவாங்க. ஜெனிலியாவின் வாழ்த்து இல்லாமல் என் பிறந்தநாள் முழுமையடையாது. அந்த அளவிற்கு வாழ்க்கையில் அவர் மிகவும் முக்கியமானவர். மற்றும் என்றென்றும் என்னுடைய பேவரைட் என சித்தார்த் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!