‘ரோட்டுக்கு போக பயம்’ – மீண்டும் அதை நினைத்து பார்க்க முடியால.. பிரபல நடிகை வெளியிட்ட உண்மைகளால் ஆடிப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
21 December 2022, 3:04 pm

பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. கங்கனா தற்போது சந்திரமுகி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

kangana ranaut -updatenews360

இந்தியா முழுவதும் சில தினங்களுக்கு முன் 17 வயது பள்ளி மாணவியை டெல்லி துவாரகா இடத்தில் மர்ம நபர் ஆசிட் வீசி தப்பி சென்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து பல நட்சத்திரங்கள் கடுமையான கண்டத்தை தெரிவித்து வருகிறார்.

அந்தவகையில் நடிகை கங்கனா ரணாவத் தன் தங்கைக்கு நடந்ததை போன்றே தற்போது இந்த மாணவிக்கும் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

kangana ranaut - updatenews360

21 வயதில் என் தங்கை ரங்கோலி சந்தேல் ரோட்டில் நடந்து செல்லும் போது மர்ம நபர் ஆசிட் வீசிசென்றதால் முகம் முழ்க்க பாதிப்பானது. 52 சர்ஜரிகள் செய்தும் கண் மட்டும் அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும், தன் கண் முன்னே இந்த கொடுர சம்பவம் நடைபெற்றதால் அப்போதில் இருந்து ரோட்டில் நடக்க பயமாக இருப்பதாகவும், கார், பைக் என வெளியில் சென்றால் கூட முகத்தை மூடிக்கொண்டு நடந்து போவேன் என்று தெரிவித்துள்ளார்.

kangana ranaut - updatenews360

மேலும் அவர், ‘தன்னை பலரும் ‘டாம்பாய் கேர்ள்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்யும் ஆண்களை தட்டி கேட்கும் பெண் என எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் நான் அப்படி அல்ல. நிஜ வாழ்க்கையில் நான் மிகவும் அமைதியான பெண். யாரையும் நான் இதுவரை அடித்தது கூட கிடையாது. உங்களை போன்ற ஆட்கள் பரப்பி வரும் வதந்திகளால் எனக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை கிடைப்பது கூட மிகவும் சிரமமாக இருக்கிறது’ என கிண்டலாக கூறினார்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!