சம்பவமே நடக்காது…. கணவருடன் நெருக்கமாக இருக்கும்போது மகன் வந்து…. மைனா நந்தினி வெளிப்படை பேச்சு!

Author: Shree
14 செப்டம்பர் 2023, 2:54 மணி
myna nandhini
Quick Share

பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார்.

கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு தனது கணவருடன் சேர்ந்து கலாட்டாவான பேட்டி கொடுப்பார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நீங்கள் உங்கள் கணவருடன் ரொமான்ஸ் செய்யும்போது மகனின் ரியாக்ஷன்ஸ் என்னவாக இருக்கும்? என கேட்டதற்கு,

என் கணவர் யோகி என்னுடன் ரொமான்ஸ் செய்தாலோ? கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாலோ மகன் துருவ் ஓடி வந்து அவரை அடிப்பான். அவனுக்கு என்னுடன் யாரும் க்ளோஸாக இருப்பது பிடிக்காது. அப்படி யோகி நிறைய முறை அடி வாங்கியிருக்கிறார். எனவே சம்பவம் நடக்காது என மைனா நந்தினி கலகலப்பாக பேசினார்.

  • England கிட்டயே நெருங்க முடியாது : டெஸ்ட் கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்த இங்கிலாந்து அணி!
  • Views: - 335

    0

    0