பட விழாவில் கண்டபடி பேசும் இயக்குனருடன் கூட்டணி வைக்கும் கீர்த்தி சுரேஷ்? எதிர்பார்க்கவே இல்ல…
Author: Prasad21 August 2025, 1:59 pm
பட விழாவில் கண்டபடி பேசும் இயக்குனர்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர்தான் மிஷ்கின். “சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” என பல வித்தியாசமான படைப்புகளை கொடுத்த மிஷ்கின் சமீப காலமாக பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது சமீப காலமாக பல சினிமா விழாக்களில் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் வருகிறார். இதன் காரணமாக அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தற்போது மிஷ்கின் “டிரெயின்”, “பிசாசு 2” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கினுடன் கீர்த்தி சுரேஷ் கூட்டணி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டாப் நடிகை
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். தற்போது “ரிவால்வர் ரீட்டா”, “கன்னிவெடி” ஆகிய திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

இத்திரைப்படத்தை Drumstick Productions நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஆனால் இத்திரைப்படத்தின் இயக்குனர் குறித்து எந்த தகவலும் இல்லை. விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
