தில்லு இருக்கவன் மட்டும் நில்லு : இணையத்தை குலுங்க வைக்கும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர்..!

Author: Vignesh
1 December 2022, 8:30 pm
naai sekar returns - updatenews360
Quick Share

வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேலுவின் படத்தை பார்க்க ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் ட்ரெய்லரை வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

naai sekar returns - updatenews360

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், ‘லொள்ளு சபா’ மாறன், மனோபாலா, ‘லொள்ளு சபா’ சேசு, டி.எம்.கார்த்திக், ‘கேபிஒய்’ ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு குரலில் வெளியான ‘அப்பத்தா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

naai sekar returns - updatenews360

ட்ரெய்லர் எப்படி? – கலர் கலரான காஸ்ட்யூமில் வித்தியாசமான கெட்டப்புகளில் தனது வழக்கமான உடல்மொழியில் ட்ரெய்லரில் ‘ஐ எம் பேக்’ என சொல்லாமல் சொல்கிறார் நடிகர் வடிவேலு. நாய்களை களவாடும் வடிவேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு, ‘உன் நாய் என்னைய கடிக்கலாம்; நான் உன் நாய கடிக்க கூடாதா?’ என்ற தனக்கே உரித்தான ஸ்லாங்கை பயன்படுத்தியிருக்கிறார்.

naai sekar returns - updatenews360

நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் வித்தியாசமான இரண்டு, மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார் வடிவேலு. பின்னணி இசையும் நகைச்சுவை பாணியையொட்டியே இருப்பது படத்திற்கு பலம் சேர்க்கும் எனத் தெரிகிறது. ஆனந்த்ராஜ், ரெடின் கிங்க்ஸ் லீ, லொள்ளு சபா நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ட்ரெய்லர் வீடியோ:

Views: - 347

4

0