தனுஷ் – செல்வராகவன் படத்தை பற்றி மாஸ் ஆன அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு…!

24 June 2021, 9:53 pm
Quick Share

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் ஒரு போஸ்டரை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். அதன் பின் அந்த படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட் வராத நிலையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அந்த படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட்டானது. மக்களுக்கு மிகவும் பேவரட் காம்பினேஷன் இவர்கள் இருவரும் தான். தற்போது கூட புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்களை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் 2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கிடையில் இதே காம்பினேஷனில் நானே வருவேன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் எனவும் பத்து வருடங்களுக்கு பின் இந்த கூட்டணியில் சேருவது மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் யுவன் சங்கர் ராஜா, தனுஷ், செல்வராகவன் மற்றும் அரவிந்த் ஆகியோரை குறிப்பிட்டு கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர் வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 265

5

2