தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாக சைதன்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகரான அக்கினேனி நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தில் நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான இளம் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்பட புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை இன்று திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ரகசியமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நேரத்தில் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் இவர் ரூ.154 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாராம்.
அத்துடன் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 911 ஜிடி3 காரை சமீபத்தில் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை கோடி சொத்து வைத்திருப்பதால் தான் இவரை அடுத்தடுத்து பெண்கள் தேடி வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் போல என நெட்டிசன்கள் கலாய்த்து கருத்து கூறி வருகிறார்கள்.
0
0