ரெண்டு பேரும் மோதிரம் மாத்திக்கொண்ட புகைப்படத்த வெளியிட்ட நடிகை நக்‌ஷத்ரா!

26 January 2021, 8:58 pm
Quick Share

தொகுப்பாளினியும், நடிகையுமான நக்‌ஷத்ரா தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதை இன்ஸ்டாகிராம் மூலமாக அறிவித்துள்ளார்.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு படித்துள்ள நக்‌ஷத்ரா தந்தி டிவியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் மூலமாக தொலைக்காட்சியில் நக்‌ஷத்ரா அறிமுகமானார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 4 மற்றும் சீசன் 5ஐ தொகுத்து வழங்கினார். அதன் பிறகு வாணி ராணி என்ற தொடரில், ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி, திருமகள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இது தவிர, சேட்டை என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். மேலும், வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது வஞ்சகன் மற்றும் ஹே சினாமிஹா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது காதலரான ராகவ் என்பவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதையடுத்து, இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை புகைப்படத்தின் மூலமாக் தெரியப்படுத்தியுள்ளார். உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி என்று குறிப்பிட்டு, நிச்சயதார்த்த மோதிரங்களை இருவரும் தங்களது கையில் வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.

Views: - 0

0

0