சரியான வாய்ப்பு இல்லாமல் பிக்பாஸுக்குள் நுழையும் பிரபல சின்னத்திரை நடிகை? அடப்பாவமே…

Author: Prasad
3 September 2025, 12:13 pm

தொடங்கியது பிக்பாஸ் சீசன் 9

சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் அதிகளவு வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார். 

எப்போதும் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கும் சச்சரவிற்கும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் சீசன் 9-ல் இன்னும் அதிக சுவாரஸ்யம் கூட்டுவது போல் போட்டிகளும் பஞ்சாயத்துகளும் அதிகளவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டியாளராகும் முன்னணி நடிகை

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி, நேஹா மேனன், பால சரவணன், அம்ரிதா ஸ்ரீனிவாசன், புவி அரசு, வினோத் பாபு, சதீஷ் கிருஷ்ணன், உமைர், ஷாபனா ஷாஜஹான், அக்சிதா அசோக் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரபல முன்னணி சின்னத்திரை நடிகை ஒருவர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளிவருகிறது.

அதாவது “தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலின் மூலம்  பிரபலமாக ஆன நட்சத்திரா நாகேஷ் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. “சேட்டை”, “வாயை மூடி பேசவும்”, “இரும்பு குதிரை” போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர் நட்சத்திரா நாகேஷ்.

Nakshathra nagesh entering in to bigg boss season 9

இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றவர். இவர் கதாநாயகியாக நடித்த “தமிழும் சரஸ்வதியும்” தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. இதன் காரணமாகத்தான் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைய உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்புகின்றன. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!