திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த நமிதா ! ஐயோ அம்மா என கதறிய ஊர் மக்கள் !

5 November 2020, 2:12 pm
Quick Share

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், தற்போது நமிதா திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு பவ் பவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வரும் ஒரு காட்சி படி நமிதா கிணற்றில் தவறி விழுந்து விடுவார், அவரை ஒரு நாய் கஷ்டப்பட்டு காப்பாற்றுவது போல ஒரு காட்சி இருக்கிறது.

அதேபோல் நமிதா கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த போது அவரின் செல்பேசி தவறி கிணற்றில் விழ அதை எட்டிப் பிடிக்க முயன்ற அவரும் கிணற்றுக்குள் விழுந்து விட, இதனை பார்த்த பொதுமக்கள் நமிதா உண்மையில் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக ஐயோ அம்மா என அலறியடிக்க, அதன் பிறகு அது ஷூட்டிங் என தெரிய பொதுமக்கள் அமைதி ஆனார்கள்.

Views: - 29

0

0