“செஞ்சு வெச்ச சிலை” – முரட்டு போஸ் உடன் நந்திதா வெளியிட்ட புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்

2 March 2021, 3:32 pm
Quick Share

அடிக்கடி பார்க்கும் பக்கத்து வீட்டு பெண் போல முக அமைப்பு கொண்டவர் நந்திதா ஸ்வேதா. அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவினார். குமுதா கதாபாத்திரத்தை அனைத்து மக்களும் ரசித்தனர்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் எல்லாம் குடும்பப்பாங்கான கதாபாத்திரமாகவே வருவதால் அவருக்கே போர் அடித்து விட்டது போல. இது சரிப்பட்டு வராது என கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார். இருந்தாலும் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கமிட்டானார். மார்ச் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருவதால் குஷியில் இருக்கிறார்.

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் நந்திதா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கையை மேலே தூக்கி செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “செஞ்சு வெச்ச சிலை மாதிரி இருக்காரே” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 564

3

1