நாற்கரப்போர்; வெளிவரும் உண்மைக் கதை; அடுத்த சதுரங்க வேட்டையா? ஆர்வத்தில் ரசிகர்கள்,..

Author: Sudha
12 July 2024, 2:45 pm

நாம் கண்டுகொள்ளாத நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களிடமும் நம்மை போலவே அனைத்து ஆசைகளும் இருக்கிறது. அதை சொல்லும் படம் தான் ‘நாற்கரப்போர்’. இது ஒரு சமூகத்தினருக்கான படம் அல்ல. ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது என்கிறார் இயக்குனர் ஶ்ரீ வெற்றி.

குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது இந்தப்படத்தின் கதைக்கருவாக இருக்கும் என்கிறார்.முதல் படத்திலேயே விளையாட்டை மையப்படுத்தி கதையை உருவாக்கும் எண்ணம் அவரது வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தின் மூலமாகவே தோன்றியது என்கிறார்.

அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் கதாநாயகனாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். வில்லனாக சுரேஷ் மேனன் நடிக்கிறார்.

இயக்குனர் மேலும் இந்த படத்தை பற்றி குறிப்பிடும் போது சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்னைகளை சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசும் என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!