“இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன் ” – நயன்தாரா ஓபன் டாக் !

Author: Udayaraman
10 October 2020, 9:43 pm
Quick Share

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது. ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் இணையதளத்தில் பதிவேற்றி ரசிகர்களை வெறியேற வைக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாராவிடம் பிரபல இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் ஒரு படத்தை சுட்டிக் காண்பித்து இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

அது என்ன படம் என்றால் தலையை வைத்து படம் பில்லா 2 இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கிய ,கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாக கூறியுள்ளார் நயன்தாரா.

Views: - 60

0

0