திருமணத்திற்கு விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன் ! இந்த முறையும் அம்பேல் தான் போல…!

By: Poorni
3 October 2020, 1:00 pm
Quick Share

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், அவரது பிறந்தநாளையும், அவரது மாமியார் அதாவது நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளையும் கோவாவில் சூப்பராக கொண்டாட இங்கிருந்து தனியாக Private Plane வைத்து கிளம்பி இங்கு வந்தார்.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா திருமணம் குறித்த புதிய வதந்தி ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. தேசிய விருது பெற்ற பின்னர்தான் தனக்கு திருமணம் என நயன்தாரா முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக இந்த வதந்தி கூறுகிறது. இனிமேல் அவருக்கு எப்போது தேசிய விருது கிடைப்பது? அதன் பிறகு எப்போது திருமணம் நடப்பது? என்று குழம்பி இருக்கிறார் விக்கி.

Views: - 42

0

0