துணை முதல்வராக நடிக்கும் நயன்தாரா?

20 April 2021, 8:08 am
Quick Share


மலையாளத்தில் மோகன் லால் நடித்த லூசிஃபர் தமிழ் ரீமேக்கில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா துணை முதல்வராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா முதல் மூக்குத்தி அம்மன் வரை தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்த தாக, மலையாளத்தில் மோகன் லால் நடித்து ஹிட்டான லூசிஃபர் படத்தில் நயன் தாரா நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. லூசிஃபர் தமிழ் ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்க இருக்கிறார்.


கிட்ட த்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் லூசிஃபர் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும், அவர் தான் துணை முதல்வராகவும் நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக இதுவரை இந்தப் பட த்திற்கு நயன் தாரா ஓகே சொல்லவில்லை. விரைவில், இது குறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 328

10

2