தேவதை போல் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா ! வைரலாகும் புகைப்படங்கள்

18 November 2020, 9:35 pm
Quick Share

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது.

அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் ஆன இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது தயாரித்து உள்ள நெற்றிக்கண் படத்தின் Teaser ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் நயன்தாராவின் பிறந்தநாளும் செம்ம கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை இப்போது வெளியாகி செம்ம வைரலாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது நயன்தாரா திருமணம் குறித்த புதிய வதந்தி ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது.