நீங்க லேடி சூப்பர் ஸ்டார் இல்ல… கேடி சூப்பர் ஸ்டார்… லகுவா பேசி மணிரத்தினம் படத்தில் வாய்ப்பு வாங்கிய நயன்தாரா!

Author: Shree
19 April 2023, 10:19 pm

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார்,

அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்த பின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள். மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க இருவரும் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய விருது விழா ஒன்றில் இயக்குனர் மணிரத்தினம் கையால் விருது வாங்கிய நயன்தாரா, சினிமாவில் இருப்பவர்களுக்கு இரண்டே இரண்டு கனவுதான் இருக்கும். ஒன்று மணிரத்னம் போல் ஆகவேண்டும் மற்றொன்று மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். எனக்கும் மணி சார் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது.

அதற்கான வாய்ப்புகள் இரண்டு முறை வந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. நான் இப்போது மணிரத்னம் கைகளால் விருதினை பெற்றுக்கொள்வதை எண்ணி பெருமை படுகிறேன் விரைவில் அவர் இயக்கத்தில் நடித்து அவர் கையால் விருது வாங்குவேன் என நம்புகிறேன் என கூறினார். இந்த சம்பவம் நடந்த சில நாளிலே மணிரத்தினம் அடுத்ததாக கமல் வைத்து இயக்கப்போகும் புதிய படத்தில் நயன்தாராவை கமிட் செய்துள்ளாராம். இதன் மூலம் நயன்தாரா கமலுடன் முதன் முறையாக நடிக்கும் ஆசையும் நிறைவேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!