“செம்ம சீனா இருக்கு” – நயன்தாராவின் புதிய படத்திற்கான பர்ஸ்ட் லுக் வெளியீடு !

22 October 2020, 6:55 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு இருக்கும் நயன்தாரா, கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனின் தயாரிப்பின் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், அந்த படத்தை பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது, ஆனால் இன்று அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியான கொஞ்ச நேரத்தில் செம்ம சீனாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.

Views: - 20

0

0